புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டிருப்பது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக போர் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் இரு பெரும் வல்லரசுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று வெளியான தகவல் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடும் இந்திய பங்குச்சந்தையில் அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இது போன்ற காரணங்களால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 529 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 889 புள்ளிகளை எட்டியது.

இது இதுவரையில்லாத புதிய உச்சமாகும். அதே போன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 159 புள்ளிகள் அதிகரித்து, 12 ஆயிரத்து 73 புள்ளிகளாக அதிகரித்தது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே