#Budget2021 – பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு..!!

வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் , வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) விதிக்கப்பட்டதன் விளைவாக, பெட்ரோலில் லிட்டருக்கு 2.5 ரூபாயும்; டீசலில் லிட்டருக்கு 4 ரூபாயும் உயரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விற்பனை விலை உயராது என்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே