தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை திறக்கப்பட இருந்த நிலையில், ஜனவரி 6-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரையாண்டு விடுமுறை முடிவடைந்து, வெள்ளிக்கிழமையான இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் ஜனவரி 2-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற துவங்கியது. அதில் 90%க்கு மேற்பட்ட பணியாளர்கள் ஆசிரியர்கள்தான்.

எனவே, ஜனவரி 4ஆம் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை பணி என்பது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

ஆனால் இன்றும் கூட மாலை வரை வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு வரை இது தொடரக்கூடும்.

ஆசிரியர்கள் சோர்வாக காணப்படுகிறார்கள். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு மீண்டும் விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6-ஆம் தேதி அதாவது வரும் திங்கள் கிழமை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே