குஜராத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாநில பொது தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்த்துள்ளார்.

குஜராத்தில் கொரோனா பரவல் காரணமாக +2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 16 வரை இரண்டு பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

அதில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரையும், மற்றோருபகுதி பிற்பகல் 2.30 முதல் 5.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று மாணவர்களின் நலனுக்காக சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்ததையடுத்து குஜராத் முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு இடையே நேற்று இரவு முதல் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குஜராத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாநில பொது தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்த்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே