வகுப்பறையில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு…!

கேரள மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து 10 வயது மாணவி உயிரிழந்தார்.

வயநாடு மாவட்டம் புத்தன்குந்நு பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி ஷஹ்லா ஷெரின், நேற்று முன்தினம் மாலை வகுப்பறையில் அமர்ந்திருக்கிறார்.

அப்போது தரையில் இருந்த ஓட்டை வழியாக வந்த பாம்பு மாணவியின் காலில் கடித்தது.

சிறிதுநேரத்தில் காலில் இருந்து ரத்தம் வருவதை கவனித்த மாணவி உடனே ஆசிரியரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் மாணவியின் பெற்றோருக்கு ஆசிரியர் தகவல் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே மாணவி இறந்தார்.

மாணவியை உடனே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாத வகுப்பு ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அரசுப் பள்ளிகளில் வசதியை மேம்படுத்தமாறு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வயநாடு எம்.பி. ராகுல் காந்தி கடிதம் மூலம் வலியுறுத்தி இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே