புதுச்சேரியில் வரும் 27-ம் தேதி போராட்டம் : முதல்வர் நாராயணசாமி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் வரும் 27-ம் தேதி பந்த் நடைபெறும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 26-ம் தேதி ஏ.எப்.டி பஞ்சாலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை, தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடத்துவது என்றும்; 27-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே