கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்..! – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது.

இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழகம் முழுதும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது.

எனினும்,கொரோனா பரவல் அதிகரிப்பதால் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோல்டன் பீரியட் என சொல்லப்படும் கொரோனா கால கட்டத்தை தமிழக அரசு வீணடிக்க வேண்டாம். 90 நாட்களை வீணடித்தது போல இனியும் வீணடித்து மக்களை வேதனை வலைக்கு வீழ்த்தி விடாதீர்கள்.

கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாழ்வியல் பேரிடரிலிருந்து மக்களை மீட்டுத்தாருங்கள்.

மின்கட்டன சலுகை அளிக்கும் முதல்வர் பெட்ரோல் விலையை ஏற்றியுள்ளார்.மேலும் ரூ.5000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

கடமையிலிருந்து தப்பித்து விடலாம் என கற்பனையிலும் நினைக்காதீர்கள் .கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே