குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து, தேசிய குடிமக்கள் பதிவேடும் நிச்சயம் அமலாகும் : ஜே.பி.நட்டா

குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து, தேசிய குடிமக்கள் பதிவேடும் நாடு முழுவதும் அமலாகும் என்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை செயலகத்தில் ஜே.பி.நட்டாவை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த சீக்கியர்கள் குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அந்த முன்னேற்றம் தொடரும் என்றும் நட்டா குறிப்பிட்டார்.

மேலும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நட்டா அப்போது கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே