கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமோனாஷ் கோஷ்(60) இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

இந்தியா முழுவதும் கொரோனாவின் உக்கிர தாண்டவம் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது.

கொரோனாவுக்கு தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பலியானார்.

இந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன். அவரது மரணம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோஷ்.

ரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் கோஷ். அவரது மறைவு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 33 ஆண்டுகாலம் எங்களுடன் இருந்தவர்.

அர்ப்பணிப்புடனேயே கட்சிப் பணியையும் மக்கள் பணியையும் ஆற்றியவர். கோஷின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே