சவுதி அரேபியாவில் தனியார் பேருந்து மீது கனரக வாகனம் மோதி விபத்து

சவுதி அரேபியாவில் தனியார் பேருந்து மீது கனரக வாகனம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்தனர்.

மதினாவில் அல் லஹல் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கனரக வாகனம் எதிர்பாராத வகையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 3பேரை அல் ஹம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆசியா மற்றும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் மதினா நகருக்கு புனித யாத்திரை வந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே