சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டிற்கு சசிகலா சென்றார்.
பண்ணை வீட்டில் சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார்.
பின்பு வரும் வரும் 7-ஆம் தேதி சசிகலா தமிழகம் திரும்புகிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா விடுதலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் வருகிற 7 ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.