முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி..!!

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடர் இன்று மூன்றாவது நாளாக தொடக்கி நடந்து வருகிறது.

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட தடை செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீடிப்பதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆறு மாத காலம் நீட்டிப்பதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் வேலுமணி பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் நடைபெற உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் முயற்சியால் குறுகிய காலத்தில் 872 அம்மா கிளினிக்குகள் துவங்கி, 7 லட்சத்து 34 ஆயிரத்து 981 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகம் முழுவதும் 2000 கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஒரு வாரத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வாரத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் தடுப்பூசி போட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்று பேரவையில் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே