நயன்தாராவுக்கும் மாணவர்களுக்கும் என்னப்பா பிரச்சனை ? ஆண்டு விழா கூத்து

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா மேடையில் நடிகை திரிஷா, நயன்தாரா, பிரியாவாரியர் உள்ளிட்ட நடிகைகளை மாணவர்கள் இரட்டை அர்த்த வசனத்தில் விமர்சித்ததால் விழாவுக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக, தமிழ் சினிமா நடிகைகளை கலாய்க்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை மாணவர்கள் நடத்தி காட்டினர்.

  • முதலில் நடிகை திரிஷாவின் வயது குறித்து விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
  • தொடர்ந்து நடிகை நயன்தாராவின் காதல் குறித்து இரட்டை அர்த்த வசனத்தில் விமர்சிப்பதை ரசித்த மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
  • பிரியாவாரியரை மிகவும் மோசமான அர்த்தத்தில் விமர்சித்தனர்.

மருத்துவ மாணவர்களின் இந்த இரட்டை அர்த்த விமர்சனத்தை கேட்டு, விழாவுக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

நடிகைகள் மீதான இந்த விமர்சனம் குறித்து அறிந்த தமிழ் திரை உலகினரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே