சீயான் 60′ படத்தில் இணைந்த ‘பேட்ட’ நடிகர்!

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சீயான் 60’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பேட்ட’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் அன்வர் என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகர் சனந்த். இவரது கேரக்டர் தான் படத்திற்கு திருப்புமுனை என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இவர் தற்போது விக்ரம் நடிக்கவிருக்கும் ’சியான் 60’ திரைப்படத்தில் இணைந்து உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே