அமமுகவின் 2 கவுன்சிலர்கள் காணவில்லை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அமமுக கவுன்சிலர்கள் இருவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், அமமுக சார்பில்,13 வது வார்டு கவுன்சிலராக சுப்புலெட்சுமியும், 14 வது வார்டு கவுன்சிலராக மாடத்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரையும், சிலர்  கடத்திச்சென்றுவிட்டதாகவும், மீட்டுத்தருமாறும், காவல்துறை இணையதளம் மூலம் மலையாண்டி என்பவர் புகார் அளித்துள்ளார்.

15 கவுன்சிலர்கள் கொண்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவின் பலம் 7 ஆகவும், திமுகவின் பலம் 5 ஆகவும் உள்ளது.

அமமுகவுக்கு  2 இடங்கள் தவிர, புதிய தமிழகம் ஒரு இடத்தை பிடித்துள்ளது.

ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக, திமுக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் இரு கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே