ஐசிசியின் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்தார் ஸ்மிருதி மந்தனா!

ஒவ்வொரு நாட்டின் அணிகளிலிருந்தும் ஆண்டின் சிறந்த அணியை தேர்வு செய்து கவுரவித்து வரும் ஐசிசியின், 2019ம் ஆண்டிற்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவின் மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் மும்பையைச் சேர்ந்த 23 வயதான ஸ்மிருதி மந்தனா.

2013-ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டி-20 தொடரில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா, இதுவரை 51 ஒருநாள் மற்றும் 66 டி-20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

இரு வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஐசிசி புதிய கவுரவம் அளித்துள்ளது.

ஆண்டுதோரும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ஒரு நாள் மற்றும் டி-20 அணிகளை ஐசிசி வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த மகளிர் அணிகளை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசியின் ஒரு நாள் அணியில் இந்தியாவை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே மற்றும் பூனம் யாதவ் ஆகிய 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு நாள் அணியில் இடம்பிடித்திருந்த ஸ்மிருதி மந்தனா டி-20 அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

தீப்தி ஷர்மா மற்றும் ராதா யாதவ் ஆகிய மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே