டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்வு : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான், தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர், டாஸ்மாக் பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்றும் இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

இந்த அறிவிப்பால் 25,690 பணியாளர்கள் பலன் பெறுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், இந்த ஊதிய உயர்வுக்காக ஆண்டுக்கு ரூ.15.42 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே