கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புதிய யோசனை!

50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரித்து விளையாடினால் நன்றாக இருக்கும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டிகள் வந்த பிறகு  50 ஓவர் போட்டிகளின்  மவுசு குறைய  ஆரம்பித்தது.

இதனால் பார்வையாளர்களிடையே சுவாரஸ்யத்தை கூட்ட 50 ஓவர் போட்டிகளில் பவர் பிளே போன்ற மாற்றங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொண்டுவந்தது. 

இதனிடையே டெஸ்ட் போட்டிகளை போன்று, 50 ஓவர் போட்டியையும் ஒரு இன்னிங்சிற்கு 25 ஓவர் என 4 இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 

பனிபடர்ந்த ஆடுகளங்களில் 2-வதாக விளையாடும் அணி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளதால் இந்த மாற்றம் தேவை என அவர் கூறியுள்ளார். 

மேலும், இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரிக்கும் என்றும் விளம்பரதாரர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே