#NZvIND : 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 டி20 போட்டியில் வெற்றி இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

முதல் 2 போட்டிகளில் சோபிக்காத ரோஹித் சர்மா இன்றையப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி 89 ரன்கள் சேர்த்திருந்த போது கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோஹித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் 3வது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை மாற்றத்திற்காக ஷவம் துபேவை களமிறக்கினார்.

ஆனால் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 38 ரன்களிலும் அவுட்டாகினர்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியில் குப்தில், முன்ரோ களமிறங்கினர்.

சற்று அதிரடியாக விளையாடிய குப்தில் 31 ரன்களிலும், முன்ரோ 14 ரன்களிலும் அவுட்டாகினர்.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேப்டன் வில்லியம்சன் 3வது வீரராக களமிறங்கினார்.

தனி வீரராக போராடிய கேப்டன் வில்லியம்சன் அரை சதம் கடந்தும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார்.

கேன் வில்லியமசன் 48 பந்துகளில் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விளாசி 95 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட போது முஹமது ஷமி பந்து வீசினார். கடைசி ஓவரில் வில்லியம்சன் அவுட்டாகி வெளியேற கடைசி ஒரு பந்தில் 1 ரன் தேவைப்பட்டது.

ரோஸ் டெய்லர் பந்தை எதிர்கொண்டு ரன் அடிக்க முயன்ற போது போல்டாகி அவுட்டானார். இதனையடுத்து போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

இதையடுத்து சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணி சார்பில் சூப்பர் ஓவரை பும்ரா வீசுகிறார்.

சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் விளாசியது.

இந்திய அணிய சார்பில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கிளார். பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

ஹிட்மேன் ரோஹித் சர்மா கடைசி 2 பந்தையும் சிக்சருக்கு விளாசி இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே