டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி, இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீனின் மகனை மணக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சானியா மிர்சாவின் சகோதரியான ஆனம் மிர்சாவும், அசாருதீனின் மகனான ஆசாத்தும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டி அளித்த சானியா மிர்சா, இருவரும் காதலிப்பது உண்மைதான் என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இவர்களது திருமணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.