ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் எங்கள் பூர்வீக சொத்து – ஜெ.தீபா

வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும்; ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து. நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .

எனவே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் ரூ. 67,90,52,033 டெபாசிட் செய்தது. 

இதனையடுத்து நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு அரசுடைமையானது என்று தமிழக அரசு அறிவித்தது.

உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் பேசுகையில், ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் தான் பொறுப்பேற்றுள்ளோம்.

எந்த அடிப்படையில் வேதா இல்லத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வீட்டின் மதிப்பை நிர்ணயித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம். வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து.

அரசுடமையாக்குவதை எதிர்க்கிறோம். சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம். வருமானவரி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது.

சட்ட ரீதியான போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது .வேதா இல்லத்தை முறைப்படி கையகப்படுத்தவில்லை .

வீட்டில் இருந்த பொருட்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே