ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நாளை சென்னை வருகை

சென்னையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதை முன்னிட்டு, தனது உரைக்கு யோசனை தெரிவிக்குமாறு மாணவர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் “ஹேக்கத்தான்” தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இந்த 2 நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு நரேந்திர மோடி செல்ல இருக்கிறார்.

இதனிடையே சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில், பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, தன்னுடைய உரைக்கு யோசனை தெரிவிக்குமாறு ஐஐடி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமோ செயலியில் மாணவர்கள் தங்கள் யோசனைகளை, பகிரும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே