சபரிமலை தரிசனக் கட்டுப்பாடுகள்..; களையிழந்த வர்த்தகம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தனி மனித இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த கோவிலில் மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர்.

முன்பதிவு செய்த போது ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். தனி மனித இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பல்வேறு நிபந்தனைகளினால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை வெகுவாய் குறைந்துள்ளது. தரிசனத்திற்காக புக்கிங் செய்தவர்களில் பலரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மண்டல கால பூஜைக்கான துவக்க நாட்களில் கோயில் வளாகத்தில் கூட்டம் இல்லாத நிலையே உள்ளது.

தமிழக-கேரளா எல்லையான குமுளியில் சபரிமலை சீசனில் சிப்ஸ், தங்கும் விடுதி, வாடகை வாகனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் களைகட்டும்.

ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் பல்வேறு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாது. எனவே வீட்டிலேயே விரதம் இருந்து அன்னதானம் செய்து அருகில் உள்ள கோயில்களில் வழிபாடுகளை செய்ய உள்ளோம் என்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே