செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது..!!

சென்னை பெருநகரின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து, குறைந்துள்ளது. ஏரியில் 82 விழுக்காடு அளவிற்கு நீர் நிரம்பியுள்ள சூழலில், உபரிநீர் திறக்கும் திட்டம் எதுவும் இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி மிகப்பெரியதாகும். இந்த ஏரியின் உச்ச நீர்மட்டம் 24 அடி என்கிற நிலையில், மாலை நிலவரப்படி 21 புள்ளி 20 அடியாக உள்ளது.

ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3685 மில்லியன் கன அடியாகும். தற்போது, மாலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2908 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது.

இது, ஏரியின் மொத்தக் கொள்ளளவில் 82 விழுக்காடாகும்.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், தொடர்ந்து அதிகரிப்பதை அடுத்து, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு, தொடர்ந்து, பார்வையிட்டு, கண்காணித்து வருகின்றனர்.

அப்போது, பேசிய அதிகாரிகள், செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து குறைந்துள்ளதால் உபரி நீரைத் திறக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் கரைக்கு வந்து, நீர் நிரம்பியுள்ளதைப் பார்த்துச் செல்கின்றனர்.

அவர்களை, நீரின் அருகே செல்ல வேண்டாம் என அங்குள்ள காவலாளிகள் அறிவுறுத்தித் திருப்பி அனுப்புகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே