தமிழகத்தில் 2,184 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 2,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 7,50,409 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 571 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,06,588 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 45,685 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,210 பேர், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அந்நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 7,20,339 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,415 ஆக அதிகரித்துள்ளது.