அரசு பேருந்தில் நாடகக் கலைஞர்கள் வாத்தியங்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி..!!

நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை (இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள்) அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

இதன்படி, இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அனைத்து தொழில்களும் முடங்கி, மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் சூழல் நிலவியது.

இதனால் திரைத்துறை தொழிலாளிகளும், நாடகக் கலைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கிராமியக் கலைகள், தெருக்கூத்து உள்ளிட்ட தொழில்கள் நலிவடைந்தன.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அளிக்கப்பட்ட தளர்வுகளின் போது, தெருக்கூத்து உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. எனவே, நாடகக் கலைஞர்கள் இப்போதுதான் படிப்படியாக தொழில்களை துவங்கியுள்ளனர்.

இருப்பினும் நாடக உபகரணங்களை பேருந்துகளில் கொண்டு செல்ல கட்டணம் வசூலிப்பது அவர்களுக்கு பெரிய சுமையாக இருந்தது. இதை இப்போது, தளர்த்திவிட்டது தமிழக அரசு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே