மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குத் திரண்டு வருகின்றனர்.

வாரணாசியில் உள்ள கங்கைக் கரையில் இன்று அதிகாலை பக்தர்கள் சிவராத்திரியை முன்னிட்டு புனித நீராடினர்.

மகாராஷ்ட்ராவில் சில கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாட கொரோனாவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபுல் நாத் கோவிலில் பக்தர்கள் இல்லாமலே வழிபாடுகள், ஆராதனைகள் செய்யப்பட்டன.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா கால பைரவர் ஆலயத்தில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இன்று ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 25 ஆயிரம் பக்தர்கள் இன்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் பெரும் திரளாக பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று இன்று காலை தரிசனம் செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே