சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன முழு அமர்வு இன்று முதல் விசாரணை மேற்கொள்கிறது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை 9 நீதிபதிகள் முழு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டது.

இதில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தியும் ஒரு முடிவை எட்ட முடியவில்லை.

ஏற்கனவே 5 நீதிபதிகள் அமர்வு அடிப்படை உரிமைகள், மதரீதியான நம்பிக்கைகளால் உருவான நடைமுறைகள் உள்ளிட்ட ஏழு முக்கிய கேள்விகளுக்கு சட்டரீதியான விடை காணுமாறு 9 நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இன்று தொடங்கும் விசாரணையின் போது இரு தரப்பினரும் வாதாட வேண்டிய முக்கிய கேள்விகள் குறித்து இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே