ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்ய எவ்வளவு நாட்கள் ஆகும்? – நீதிமன்றம் கேள்வி..!!

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் என உயர்நீதிமன்ற கிளை கேள்வி கேட்டுள்ளார். 

ஆன்லைன் ரம்மி தடை செய்ய கோரிய மனுக்கள் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்..? என கேள்வி எழுப்பிய நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும்; அரசுத் தரப்பில் தகவல் சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு விளம்பரம் செய்வதாக உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது.

சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழகத்தில் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதிப்பற்ற உயிர்கள் பல ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பறிபோகின்றன, ஆன்லைன் விளையாட்டால் உயிர்களை பறிபோவதை தடுக்க விரைந்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து வரும் 24-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே