தமிழக அரசின் உள்துறை செயலாளராக S.K. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த பொறுப்பில் இருந்த IAS அதிகாரி நிரஞ்சன் மார்டி, இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1989-ம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது செயலாளர்களில் ஒருவராகவும், பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளராகவும் இருந்தவர்.