உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவ.18-ல் எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து மரபுப்படி அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை நியமனம் செய்ய பரிந்துரைத்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அவர் கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக சட்ட அமைச்சகம் பிரதமருடன் ஆலோசித்த பிறகு எஸ்.ஏ.பாப்டேவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து நவம்பர் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே