அயோத்தி வழக்கில் ஷியா வக்ஃபு வாரிய மனுக்களை 5 நீதிபதிகளும் ஒரு மனதாக தள்ளுபடி செய்தனர்.

அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வு சார்பில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கி இருப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்.

நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

உத்தபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சமமான பிரிவாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன.

வழக்கை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூசன், அப்துல் நாசர் ஆகிய 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஷன்னி பிரிவுக்கு எதிராக ஷியா வாரியம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடிசெய்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதன் மூலம் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே