பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல்..!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ள வருமான வரித்துறையினர், ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் 
மற்றும் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மொத்தம் 38 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த சோதனை குறித்து தற்போது வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகளில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு ரூ.300 கோடிவரை வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, மதுரையில் அன்புச்செழியனின் நண்பர் வீட்டில் இருந்து, 20 கோடி ரூபாய் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அன்புச்செழியனின் நண்பர் சரவணன் என்பவரது வீட்டில், 30-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 20 கோடி ரூபாய் ரொக்க பணம் மற்றும் பென்டிரைவ், ஹார்டிஸ்க் உள்ளிட்டவைகளும், கைப்பற்றி எடுத்து சென்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே