அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பையோடெக் நிறுவனத்தில் பிரதமர் மோடி ஆய்வு..!!

ஆமதாபாத்தில் உள்ள ஆய்வகத்தில் தயாராகி வரும் ஜைகோவ்-டி கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி இன்று (28 ம் தேதி) சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய குஜராத் மகாராஷ்டிரா, மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

அதன்படி முதலாவதாக, ஆமதாபாத்தின் அருகேயுள்ள சங்கோடர் தொழில் பூங்காவில் அமைந்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்து வரும் ஜைகோவ் – டி தடுப்பு மருந்து குறித்து மோடி நேரில் ஆய்வு செய்தார்.

இந்த மருந்து, தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து வரும் தடுப்பு மருந்தை பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார். 

இந்த நிறுவனம் சர்வதேச மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

பின்னர், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாரத் பயோடெக் தயாரித்து வரும் கோவாக்சின் மருந்தை ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த மருந்து தற்போது 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே