நடிகர் விஜய் வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றபடவில்லை என்று வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பிகில் படத்தில் நடித்ததற்கு வாங்கப்பட்ட சம்பளம் தொடர்பாக உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக விஜயிடம் சுமார் 30 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

மேலும் விஜய் வீடு, ஏ.ஜி.எஸ் அலுலவகம், அன்புசெழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விசாரணை தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

இந்தநிலையில், இந்தச் சோதனை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அந்த செய்திக் குறிப்பில், நேற்று வருமான வரித்துறை சினிமாத்துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர், முக்கிய நடிகர், பைனான்சியர், விநியோகஸ்தர் ஆகிய நால்வருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த நால்வரது சொந்தமான இடங்களிலும் சோதனை செய்ததற்கு முக்கிய காரணம், சமீபத்தில் வெற்றிகரமாக 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஓடிய படம் தான் காரணம்.

சென்னை மற்றும் மதுரையில் 38 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில் முக்கியமான விஷயம், சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்ட சோதனையில் பைனான்சியருக்கு சொந்தமான இடத்திலிருந்து கணக்கில்காட்டப்படாத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின்போது, ஏராளமான சொத்து ஆவணங்கள், பின்தேதியிட்ட காசோலை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, மறைத்து வைக்கப்பட்ட ஆவணங்களின் மதிப்பு 300 கோடி ரூபாயைத் தாண்டும் என்று தெரிகிறது.

இந்தச் சோதனை நடைபெற்ற விநியோகஸ்தர் ஒரு கட்டுமான நிறுவனம் உரிமையாளராகவும் இருக்கிறார்.

அந்த விநியோகஸ்தர் அவரது நண்பர் வீட்டில் மறைத்துவைத்திருந்த அதிகாரப்பூர்வ ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணையின்போது ஆவணங்கள் குறித்த முழு விவரங்கள் வெளிவரலாம்.

வருமான வரிச்சோதனைக்கு உள்ளான தயாரிப்பாளர் படத் தயாரிப்பு, பட விநியோகம், திரையரங்கம் உள்ளிட்ட தொழில்களை நடத்திவருகிறார்.

அவர்களது அலுவலகத்திலுள்ள கணக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.

உண்மையான ஆவணங்கள், செலவுகள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

நடிகரிடம் நடைபெறும் விசாரணை, தயாரிப்பாளரிடமிருந்து ஊதியம் வாங்கியது தொடர்பாகவும், அதன்மூலம் அசையா சொத்துகள் வாங்கியது தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே நடிகரிடம் விசாரணை நடைபெறுகிறது.

இன்னும் சில இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நடிகர் விஜய் வீட்டில் இதுவரை நடைபெற்ற சோதனையில் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் வருமான வரித்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே