விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது, அவரை அச்சப்படுத்தவே இந்த வருமான வரி சோதனை : சீமான்

நடிகர் விஜய் வீட்டில் நடந்து வரும் வருமான வரி சோதனை குறித்து பேசியுள்ள சீமான், நடிகர் ரஜினியை மறைமுகமாக சாடியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை கீரின்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளரிகளிடம் பேசிய அவர், நடிகர் விஜய்க்கு அரசியல் ஆர்வமும் மக்களிடம் செல்வாக்கும் இருக்கிறது எனவே அவரை அச்சப்படுத்தவே இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறியுள்ளார். 

நடிகர் விஜய்யை விட அதிகம் சம்பாதிப்பாதிக்கும் ஒரு நடிகர் இருக்கிறார் எனக் கூறிய அவர், ஒரு படத்திற்கு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.126 கோடி சம்பளமாக வாங்குகிறார் அந்த நடிகரின் வீடுகளுக்கெல்லாம் வருமான வரித்துறையினர் செல்வதில்லையே ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்திய இஸ்லாமியருக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் முதலில் குரல் கொடுபேன் என கூறிய ரஜினி, ஆசிஃபா வன்புணர்வு கொலை வழக்கில் குரல் கொடுத்தாரா என ரஜினிக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே