காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் – 6 பேர் கொண்ட குழு அமைப்பு..!!

சீனியர் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் புகாரை குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் உயர் பதவியில் உள்ள ஒரு பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக கடந்த 2 தினங்களாக காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டால் அது குறித்து விசாரணை செய்ய விசாக கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 பேர் கொண்ட குழுவில் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, தன்னார்வலர் லோரட்டா ஜோனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, பாலியல் தொல்லை தந்தாக சிறப்பு டிஜிபி ரமேஷ் தாஸ் என்பவர் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே