இந்த லேட்டஸ்ட் சாம்சங் கேலக்ஸி மாடல் மீது ரூ.7,000 விலைக்குறைப்பு; ரூ.8000 அப்கிரேட் ஆபர் வேற!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி இசட் பிளிப் மீது அதிரடியான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இப்போது ரூ.11,99999 க்கு பதிலாக ரூ.10,8999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சாம்சங் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை சொந்தமாக்க விரும்பும் நுகர்வோருக்கு ரூ.7000 தள்ளுபடி கிடைக்கும் என்று அர்த்தம்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களிலிருந்து கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அப்கிரேட் ஆக விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.8000 என்கிற அப்கிரேட் போனஸையும் பெறலாம் என்று சாம்சங் ஒரு செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.
மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் மீது முன்னணி வங்கிகள் 18 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களையும் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆனது தற்செயலான டேமேஜ் கவர் உடன் வருகிறது, இதன் வழியாக நீங்கள் ஒரு முறை திரை பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் 24×7 பிரத்யேக கால் சென்டர் ஆதரவு ஆகியவைகளை பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போன் மிரர் கோல்ட், மிரர் பர்பில் மற்றும் மிரர் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இது சாம்சங்கின் முதல் eSIM ஸ்மார்ட்போன் ஆகும், இதில் உள்ள eSIM (தற்போது ஏர்டெல் & ஜியோ நெட்வொர்க்குகளில் கிடைக்கிறது) மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு நானோ சிம் கார்டு ஸ்லாட்டும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் – டிஸ்பிளேக்கள்:

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் பிரதான மடிக்கக்கூடிய டிப்ஸ்ளே ஆனது 6.7 இன்ச் அளவிலான முழு எச்டி (1080×2636 பிக்சல்கள், 21.9: 9, 425 பிபி) டைனமிக் அமோலேட் பேனலை கொண்டுள்ளது – மேலே குறிப்பிட்டபடி இது இன்பினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே என்று அழைக்கப்படுகிறது. வெளிப்புறத்தில், 112×300 பிக்சல்கள் அளவிலான திரை தீர்மானம் மற்றும் 303ppi பிக்சல் அடர்த்தி கொண்ட 1.1 இன்ச் அளவிலான சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் – டூயல் சிம், ப்ராசஸர் மற்றும் ஓஎஸ்:

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஒரு டூயல் சிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும், இதில் ஒரு ஈசிம் மற்றும் ஒரு நானோ சிம் கார்டு ஸ்லாட் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பெயரிடப்படாத 7nm ஆக்டா-கோர் SoC மூலம் இயக்கப்படுகிறது, இதன் அதிகபட்ச க்ளாக் வேகம் 2.95GHz ஆகும் மற்றும் இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் – கேமராக்கள்:

கேலக்ஸி இசட் ஃபிளிப்பில் டூயல் பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா (எஃப் / 1.8, 1.4-மைக்ரான் பிக்சல்கள், 78 டிகிரி எஃப்ஒவி) மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா (எஃப் / 2.2 , 1.12-மைக்ரான் பிக்சல்கள், 123 டிகிரி FoV, OIS) உள்ளது. இது எச்.டி.ஆர் 10 + வீடியோ பதிவிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஆனது 10 மெகாபிக்சல் (எஃப் / 2.4, 1.22-மைக்ரான் பிக்சல்கள், 80 டிகிரி ஃபோவி) செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் – மெமரி, கனெக்டிவிட்டி, சென்சார்கள்:
சாம்சங் கேலக்ஸி ஃபிளிப்பில் 256 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரி உள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கம் செய்ய முடியாது என்பது கவனிக்கத்தக்கது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.0, யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி, எம்.எஸ்.டி மற்றும் ஜி.பி.எஸ் (ஏ-ஜி.பி.எஸ்) ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தவரை, அக்ஸலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட், பாரோமீட்டர், கைரேகை சென்சார் (ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் உள்ளது), கைரோஸ்கோப், மேக்னட்டோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் – அளவு, எடை மற்றும் பேட்டரி:

அளவீட்டில், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கும்போது 87.4×73.6×17.33 மிமீ, மற்றும் திறக்கப்படும்போது 167.3×73.6×7.2 மிமீ உள்ளது. இதன் எடை 183 கிராம் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை, மோனோ ஸ்பீக்கர் உள்ளது. இந்த மொத்த அமைப்பும் ஒரு 3,300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

200,000 முறை திறக்கலாம் மூடலாம்!

கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆனது கூகுள் உடன் இணைந்து உருவாக்கம் பெற்ற ஃப்ளெக்ஸ் மோட் UI-ஐ கொண்டுள்ளது. இது ‘ஹைட்வே ஹிஞ்’ மூலம் இயக்கப்படுகிறது, இது கேலக்ஸி இசட் ஃபிளிப்பை பல கோணங்களில் திறந்து வைக்க பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் இந்த ஹிஞ் (கீழ்) ‘இரட்டை கேம் மெக்கானிசத்தை’ கொண்டுள்ளது. மேலும் அழுக்கு மற்றும் தூசியைத் தடுக்க நைலான் இழைகளால் ஆன ‘ஸ்வீப்பர்’ தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் கீல் மற்றும் டிஸ்பிளேவை சுமார் 200,000 முறை திறக்க மற்றும் மூட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேல் பாதி – கீழ் பாதி!

கேலக்ஸி இசட் ஃபிளிப்பில் உள்ள ஃப்ளெக்ஸ் மோட் ஆனது மெயின் போல்டபில் டிஸ்பிளேவை ‘இரண்டு 4 இன்ச் டிஸ்பிளேவாக’ பிரிக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் உங்களால் ஒரு YouTube வீடியோவை மேல் பாதியிலும், மற்றொரு வீடியோவை பார்க்கலாம் கீழ் பாதியிலும் பார்க்கலாம் என்று அர்த்தம். இதன் 1.1 இன்ச் அளவிலான கவர் டிஸ்பிளே ஆனது நோட்டிபிகேஷன்களை காண்பிக்கும். இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் பே, சாம்சங் ஹெல்த், சாம்சங் நாக்ஸ் மற்றும் பல அம்சங்களும் உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே