பட்ஜெட் விலையில் 32-இன்ச், 43-இன்ச் & 55-இன்ச் ஒன்பிளஸ் டிவிகள்; தரமான சம்பவம்!

ஒன்பிளஸ் நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் ஒன்பிளஸ் டிவி 2020 மாடல்களை அறிமுகம் செய்கிறது. இந்த வெளியீடு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்த புதிய டிவி வரிசையில் மூன்று தனித்துவமான மாடல்கள் இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் ஒரு டீஸர் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. வரவிருக்கும் இந்த புதிய ஒன்பிளஸ் டிவி மாடல்கள் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட் டிவிக்கள் 4 கே தீர்மானத்தை கொண்டு வெளியாகவும் வாய்ப்புள்ளது.
இந்த புதிய ஒன்பிளஸ் டிவி 2020 மாடல்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த வெளியீட்டு நிகழ்வு எப்போது நடக்கும்?

ஒன்பிளஸ் டிவி 2020 மாடல்கள் அறிமுக நிகழ்வு லைவ்ஸ்ட்ரீம் விவரங்கள்:

ஒன்பிளஸ் டிவி 2020 வெளியீடானது இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும், இதுவொரு ஆன்லைன் நிகழ்வு ஆகும் அதாவது லைவ்ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அர்த்தம். இதை ஒன்பிளஸ் இந்தியா ட்விட்டர் மற்றும் யூடியூப் அக்கவுண்ட்கள் வழியாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஒன்பிளஸ் டிவி 2020 மாடல்களின் (எதிர்பார்க்கப்படும்) விலை:

ஒன்ப்ளஸ் டிவி 2020 மாடல்களின் அதிகாரப்பூர்வ விலையானது இன்று வெளியீட்டு நிகழ்வின் போதே வெளிப்படும். இருப்பினும் ஒன்பிளஸ் ஏற்கனவே இவைகளின் விலை நிர்ணயம் சார்ந்த சில தகவல்களை நமக்கு வழங்கியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவிகளின் தொடக்க விலையானது ரூ.1X,999 ஆக இருக்கும் என்றும், இது ரூ.4X,999 வரை நீளும் என்றும் கூறி இருந்தது. இந்த புதிய ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கான முன்பதிவுகள் ஆனது ரூ.1000 மதிப்பிலான கூடுதலாக நீடிக்கப்பட்ட உத்திரவாததுடன் ஏற்கனவே அமேசான் வழியாக தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் டிவி 2020 மாடல்களின் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:

இரண்டு தனித்துவமான தொடர்களின் கீழ் மூன்று புதிய ஒன்பிளஸ் டிவி மாடல்கள் வெளியாகும் என்பதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் பெஸல்லெஸ் வடிவமைப்பானது முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 8 தொடரை விட மெலிதாக இருக்கும் என்றும், இதன் கட்டமைப்பு “சுமை இல்லாத வடிவமைப்பாக” இருக்கும் என்றும் ஒன்பிளஸ் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த டிவிகளில் 93 சதவீத டிசிஐ-பி 3 வண்ண வரம்பை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த டிவிகள் ப்ரீ-இன்ஸ்டால்ட்டு நெட்ஃபிலிக்ஸ் ஆப், டால்பி அட்மோஸ் ஒலி மற்றும் டால்பி விஷன் காட்சி தொழில்நுட்பங்களுக்கான ஆதரவு போன்றவைகளையும் கொண்டிருக்கும்.

வதந்திகளை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் டிவி 2020 வரிசையில் 32 அங்குல எச்டி, 43 அங்குல முழு எச்டி மற்றும் 55 அங்குல 4 கே மாடல்கள் அறிமுகமாகும். இந்த டிவிகள் 90 டிகிரி சுழற்சி ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்களையும், 50 சதவிகித ஆழமான பாஸையும் வழங்கும் என்றும் டீஸ் செய்யப்படுகின்றன. மேலும், பிரீமியம் உணர்வை வழங்க பின்புறத்தில் கார்பன் ஃபைபர் வடிவத்துடன் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே