பருவமழை தேவைக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உடனடித் தேவைக்காக கூடுதல் உபகரணங்கள், சிறப்புக் கருவிகள் போன்றவை வாங்குவதற்காக தமிழக அரசு 40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார், ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

வடகிழக்கு பருவமழையால் உடனடியாக பாதிப்புக்குள்ளாக கூடிய 4 ஆயிரத்து 399 பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 639 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 9 ஆயிரத்து 612 பெண்கள் அடங்கிய 21,597 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே