7.5% இட ஒதுக்கீடு மூலம் MBBS, BDS சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு..!!

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு ரூ.16 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த ஒதுக்கீட்டின் படி பல மாணவர்களுக்கு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியிலும், சிலருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்தது.

ஆனால் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வறுமை காரணமாக பணம் செலுத்த முடியாமல் பலர் கல்லூரிகளை தேர்வு செய்வதை கைவிட்டு விட்டனர்.

இது குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியானதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அந்த மாணவர்களின் படிப்பு செலவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார். 

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் அரசே அந்த மாணவர்களுக்கான படிப்புச் செலவை ஏற்கும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் 7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் பயில முதற்கட்டமாக 16 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் அவர்களுக்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த சூழல் நிதியும் உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் முன்னதாக அறிவித்திருந்தார், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே