காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்..!!

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை தாங்கினார். 

இந்த விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பயன்பெறும் என கூறப்படுகிறது.

One thought on “காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்..!!

  • காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
    ithu copy cont thana

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே