தமிழகத்தில் இன்று முதல்நாள் மட்டும் ரூ.150 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன.
இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் இன்று மது வாங்கிச் சென்றனர்.
மதுப் பிரியர்களின் தேவைக்காக வழக்கத்தைவிட அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அனைத்தையும் தாண்டி பல மது வகைகள் விற்றுத் தீர்ந்ததாக மாநிலம் முழுவதும் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
மாலை ஐந்து மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஸ்டாக் காலியாகிவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஒரு நாள் மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.