10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

தொலைக்காட்சி வாயிலாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது,

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் தொடங்கி வைத்தார்.

மேலும், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

இத்தொலைக்காட்சியில், எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை முதல்வர் இன்று துவக்கி வைத்தார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை, அவ்வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், முதல்வரிடம் இன்று சமர்ப்பித்தார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே