#BREAKING : மார்ச் 22ம் தேதி மட்டும் ஜனதா ஊரடங்கு அமல்படுத்தி கொள்ள வேண்டும் – பிரதமர்

வரும் 22ஆம் தேதி கொரோனாவுக்கு எதிரான சோதனை ஊரடங்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வரும் ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்ற உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

ஒரு சில நாடுகள் கொரோனாவால் எவ்வளவு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நாம் பார்க்கிறோம்.

நமக்கு அந்த நிலைமை வராது என்று நாம் குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் இருக்க கூடாது.

கொரோனாவிற்கு எதிராக நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

மக்கள் அலுவலகத்திற்கு செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய நிதி அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

குறைந்த வருவாய், நடுத்தர வருவாய், உயர்வருவாய் பிரிவில் உள்ள அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.

மேலும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவசிய பணிகள் மற்றும் மருத்துவ சேவைகள் மீதான சுமை வரும் காலங்களில் அதிகரிக்கும்.

வரும் நாட்களில் சாதாரண பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம்.

தற்போதைய நெருக்கடியை உறுதியுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஜனதா ஊரடங்கு தான் இதற்கு சரியான திட்டம்.

ஜனதா ஊரடங்கு என்றால் மக்களால் மக்களுக்காக செய்யப்படும் ஊரடங்கு. இதன் படி வரும் ஞாயிற்றுக்கிழமை யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.

காலை ஏழு மணி முதல் அன்று இரவு ஒன்பது மணி வரை பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும்.

இப்படி ஒரு நாள் மட்டும் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தால் கொரானாவை கட்டுப்படுத்தி விட முடியுமா?

ஆனால் இந்த அறிவிப்பின் நோக்கம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தங்களை பழக்கிக் கொள்வதற்கான முதற்படி என்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மக்கள் தங்களை ஒரு நாள் வீடுகளுக்குள் இருக்க பழக்கினால் அடுத்த நாட்களில் கொரானவிற்கு எதிராக போராட வசதியாக இருக்கும்.

இதனால் தான் மோடி ஒரே ஒரு நாள் ஜனதா ஊரடங்கு எனும் மக்கள் ஊரடங்கை பிறப்பித்துள்ளார்.

இதற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொருத்து எதிர்கால திட்டங்கள் இருக்கும்.

இப்படி இருப்பதன் மூலம் கொரோனா பரவுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று மோடி கூறினார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தை இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடுகிறது.

130 கோடி மக்களும் கொரோனாவை குறித்தே பேசுகின்றனர்.

முதல் மற்றும் இரண்டாம் உலக போரை காட்டிலும் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழ்நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உலகம் ஆரோக்கியமாக இருக்கும்.

கொரோனாவுக்கு மருந்தே இல்லாத நிலையில், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அதற்காக, கூட்டமாக கூடுவதை மக்கள் தவிர்த்துவிட்டு, வீடுகளில் இருக்க வேண்டும்.

பால், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ளும்.

இந்த சமயத்தில் அவசர அவசரமாக கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே