இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242 புள்ளிகள் சரிந்து 31 ஆயிரத்து 443 ஆக நிலை கொண்டது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 56 புள்ளிகள் குறைந்து 9215 நிறைவு பெற்றது.

வங்கி, FMCG, மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

மூன்றாவது காலாண்டில் எதிர்பாராதவிதமாக யெஸ் வங்கி 2628 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக அறிவித்ததை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்தது.

வர்த்தக இறுதியில் 6 சதவிகித உயர்வுடன் ஒரு பங்கின் விலை 28 ரூபாயாக இருந்தது.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அந்நிய செலவாணி சந்தைக்கு விடுமுறை என்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி எழுபத்தைந்து ரூபாய் 76 காசுகளாகவே இருந்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே