கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 43 நாட்களாக மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று காலை 10 மணி முதல் டாஸ்மாக்களில் மதுவிற்பனை தொடங்கியது.
அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே அதாவது ஒரு ஃபுல் அல்லது 4 குவார்ட்டர் என்ற அளவில் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், திருப்பூர் மது அருந்திய இளைஞர் ஒருவர் தலைக்கேறிய போதையில் கல்லூரி சாலையில் அடாவடி செய்துள்ளார்.
அந்த சாலையில் சென்றவர்களை போதை இளைஞர் திடீரென தாக்கியதோடு ஆபாசமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பலர் சேர்ந்து போதை இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், தகவல் கிடைத்தன் பெயரில் வந்த திருப்பூர் வடக்கு போலீசார் இளைஞரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.