ஆதாரையும் பான் கார்டையும் இணைக்காவிட்டால் 10,000 ரூபாய் அபராதம்; எவ்வாறு இணைப்பது?

பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இம்மாத இறுதிக்குள் இணைக்காவிட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.

பான் கார்டையும் ஆதார் கார்டையும் மார்ச் 31-ம் தேதிக்குள்  இணைக்காவிட்டால் பான் கார்டுகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என வருமான வரித்துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

அவ்வாறு செயலிழந்து போகும் பான் கார்டுகளின் உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி 10,000 ரூபாய் அபராதம் விதிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபராதத்தை செலுத்தியபிறகு உடனடியாக பான் கார்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

எப்படி இணைப்பது?

1. incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்

2. Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும்.

3. திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.

4. ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே