கை சிதைந்த நெல்லை தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு!!

நெல்லை மேலப்பாளையம் மண்டலத்தில் குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மாட்டி கை சிதைந்த தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமி என்பவர், மக்கும் குப்பையை தனியாக பிரித்து எந்திரத்தில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று அவரது வலது கை எந்திரத்தில் சிக்கி துண்டானது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாக்கியலட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாக்கியலட்சுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே