சென்னையில் கொரோனா பாதிப்பு 15,770ஆக உயர்ந்துள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னையில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னையில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே